புதிய தொழிற்துறை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்.

11.09.2026 08:25:17

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு புதிய தொழிற்துறை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முன்மொழியப்பட்ட விமான நிலைய பகுதிக்கு அருகில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுமங்கலம் பகுதியில் "SIPCOT - SIPCOT மதுமங்கலம் தொழிற்பூங்கா" அமைப்பதற்காக தமிழ்நாடு நில ஆர்ஜித சட்டம், 1997-ன் கீழ் 8.3820 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழிற்பூங்காவில் அதிநவீன semiconductor மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்புக்கான சிறப்பு பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் தொழில் வளர்ச்சி பெருகுவதுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். 

நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டு தொகைகள் சிப்காட் நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்படவுள்ளதுடன், இதற்கான காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்களில் திட்ட வரைபடங்களை ஆய்வு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் முதல்வர் விஜய்யின் இந்த அதிரடித் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.