தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்து

07.02.2021 08:45:30

 

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார, குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்தது அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக 60 சதவிகித சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் பல மாநிலங்களில் இந்த எண்ணிக்கை இதற்கும் குறைவாகவே உள்ளதால், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.