பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு

04.08.2022 10:55:45

அ.தி.மு.க. தலைமை கழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார். தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடும் விதத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமை கழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார். தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடும் விதத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. : அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது.

கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராக டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஐகோர்ட்டில் நாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.