சிம்புவின் அரசன் தாமதமாவது ஏன் ?

01.11.2025 13:00:00

அரசன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியான நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் இருக்கின்றது. அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கின்றத.

சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரோமோ இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த ஐந்து நிமிட ப்ரோமோவை பார்த்தவுடனே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எங்கேயோ சென்றுவிட்டது. அதுவும் வடசென்னை உலகில் இப்படம் உருவாகவிருப்பது தனி சிறப்பாகவே பார்க்கப்படுகின்றது.