சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் போது சில அமைச்சுக்கள் அமைதி காக்கின்றது – மஹிந்தானந்த

29.10.2021 05:23:23

இரசாயன உரத்துக்குப் பதிலாக, சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும்போது, சில அமைச்சுக்கள் அமைதிப் போக்கை கடைப்பிடிப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இணையவழி மெய்நிகர் முறைமையில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.