பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்!
10.06.2026 14:44:52
|
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் இன்று காலை காலமானார். இவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அவர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தினார். |
|
மேலும், திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து சூர்யா, சிவகுமார், மு.க. ஸ்டாலின், சீமான், சுகன்யா, வைரமுத்து, இளையராஜா, மாரி செல்வராஜ் என பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். |