தீவிரவாதிகள் காஷ்மீரில் கைது !
18.02.2021 10:35:51
காஷ்மீரில் தலைமறைவாகி இருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள படகுண்ட் மற்றும் தத்ஸாரா டிரால் கிராமங்களில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புல்-முஜாஹிதீனைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.