மும்பை அணிக்கே அதிக வாய்ப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட்தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், ``ஐபிஎல் இரண்டாம் பாதி துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டதால் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை சற்று முன்னணியில் இருப்பதாக எண்ணுகிறேன். எனவே அவர்களுக்கு கோப்பையை வெல்ல கூடுதல் வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும், இதனால் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.
சென்னையின் சராசரி மதிப்பெண் முதல் கட்டத்தில் 201 ஆக இருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்களில் அவர்கள் பேட்டிங்கில் சிக்கல்களை சந்திக்கக் கூடும். அக்டோபர் 10 -ம் தேதி வரை அணிகளை மாற்ற ஐசிசி வாய்ப்பு வழங்கியதால், பஸ்ஸை தவறவிட்ட சில நல்ல வீரர்களுக்கு இன்னும் இடம் கிடைக்கலாம்’’ என்றார்.