மீண்டும் இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா !
25.02.2021 09:22:49
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 106 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,046,432 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,736,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 257 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 144 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 56 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.