
ஷங்கரின் அடுத்த பட ஹீரோ!
13.02.2025 07:10:00
இயக்குனர் ஷங்கர் கடந்த சில வருடங்களாக கெரியரில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய தெலுங்கு படமான கேம் சேஞ்சர் படமும் பெரிய தோல்வியாக மாறி இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வருகிறது. |
இந்நிலையில் ஷங்கர் அடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம். துருவ் அப்பா விக்ரம் கேட்டுக்கொண்டதால் தான் ஷங்கர் இந்த படம் இயக்குகிறார் என கூறப்படுகிறது. |