உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி

23.01.2023 21:55:52

இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்கு சிறைக்கைதிகள் சிலர் தோற்றவுள்ளனர்.

இதன்படி, மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதி சிறைவாசத்தின் போது "அனுஷய ஆசவ" என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றார்.