கடும் விமர்சனங்களை வெளியிட்ட மக்கள்

20.05.2022 09:58:31

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை ஒரு தரப்பு சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டாலும் மற்றுமொரு தரப்பு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த போர் வெற்றி கொண்டாட்டத்திற்கு பணத்தை செலவிட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கி வருகின்றது.

சமூக ஊடங்களில் அரசாங்கத்தின் போர் வெற்றி கொண்டாட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்டு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக ராஜபக்சர்கள் மீது சிங்களவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.