பதவி விலகினார் கங்குலி

30.10.2021 04:24:09

கோல்கட்டா மோகன் பகான் கால்பந்து அணி நிர்வாகத்தின் இயக்குனர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலகினார்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா மோகன் பகான் அணியின் இயக்குனர்களில் ஒருவராக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி இருந்தார். சமீபத்தில், கோல்கட்டா அணியின் உரிமையாளரான சஞ்ஜீவ் கோயன்கா, ஐ.பி.எல்., தொடரில் லக்னோ அணியை ரூ. 7090 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். இதனையடுத்து ‘லோதா கமிட்டி’ பரிந்துரைபடி ஆதாயம் தரும் இரட்டை பதவி பிரச்னை எழும் என்பதால், கங்குலி தனது இயக்குனர் பதவியில் இருந்து விலகினார்.

 

இதுகுறித்து சீனியர் ஐ.பி.எல்., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘சஞ்ஜீவ் கோயன்காவின் ஆர்.பி.–எஸ்.ஜி., குழுமம் ஐ.பி.எல்., லக்னோ அணியை வாங்கியது. எனவே, ஆதாயம் தரும் இரட்டை பதவி பிரச்னை எழும் என்பதால் கங்குலி, தனது இயக்குனர் பதவியில் இருந்து விலகுவதாக கோல்கட்டா அணி நிர்வாகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டார்,’’ என்றார்.