இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார்!
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் இன்று ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.
இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் தலைமையில், எகிப்து, கடார், ஐக்கிய அரபு இராச்சியம், லிபியா, ஈரான், குவைத், சவூதி அரேபியா, ஓமான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நிலையானதும் செயலூக்கமானதுமான பாலஸ்தீன அரசாங்கத்தை நிறுவி, றுநளவ டீயமெ பகுதிகளில் தஞ்சம் புகுந்திருப்பவர்களை நிரந்தரமாக குடியமர்த்த அவசியமான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஒரு நாட்டை நிறுவி இரு நாடுகளுக்கு தீர்வு வழங்க முடியாதெனவும், ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் காசா எல்லைகளில் மீதான தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்த கூடாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும் காசா எல்லை பகுதிகளுக்கு இலங்கையின் உதவிகளை வழங்கவிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அப்பகுதிக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல் செங்கடலின் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்பாக வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் கடல்வழி போக்குவரத்தில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலேயே இலங்கை மேற்படி முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது மேற்குலக நாடுகளுடன் காணப்படும் தொடர்புகளுக்கு மேலதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வலயங்களுடனான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள இலங்கை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் விரிவான வெளியுறவுக் கொள்கை குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.