பாரா ஒலிம்பிக் இந்தியாவுக்கு முதல் தங்கம்
30.08.2021 05:46:52
ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் முதல் தங்கம் ஆகும்.
நேற்று டேபிள் டென்சில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது.
இந்நிலையில் இன்று மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெக்ரா தங்கம் வென்றார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுபோல் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார். ஒரே நாளில் இந்தியாவுக்கு இன்று 2 பதக்கம் கிட்டியுள்ளது.