ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லி பேரணி.

29.10.2026 13:56:59

இந்தியாவில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க, நவம்பர் முதலாம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

 

வாக்குத் திருட்டைத் தடுத்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதே இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்புகளைக் கடந்து, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது ஒரு அரசியல் கட்சிக்கான பேரணியல்ல; இந்தியாவின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பதற்கான போராட்டம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.