சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
07.06.2026 22:13:25
முன்னாள் அரச புலனாய்வு சேவைத் (SIS) தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காவலில் உள்ள நிலையில் அவர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தே, உடல்நிலை மோசமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் உணவு, நீர் மற்றும் மருந்துகளைக் கூட நிராகரித்துள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முன்னதாக அவரது சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.