பாகிஸ்தானின் எக்ஸ் தள கணக்குகளுக்கு இந்தியா தடை!

04.05.2025 14:11:33

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

 

இந்திய அரசின் சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்களது எக்ஸ் தள கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தாக்குதலை தொடர்ந்து பிரபல பாகிஸ்தான் நடிகர்களான மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர் உள்ளிட்ட சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டன.

ஏற்கெனவே பாகிஸ்தான் நாட்டின் 16 யூடியூப் தளங்களை இந்தியா முடக்கி இருந்த நிலையில் . இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்களை இந்த யூடியூப் தளங்கள் பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

 

தற்போது இந்தியாவில் எக்ஸ் தள கணக்கு முடக்கத்தை எதிர்கொண்டுள்ள பிலாவல் பூட்டோ, சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால் அதில் இந்தியர்களின் இரத்தம் பாயும் என கூறியிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் 22-ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தமையை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.