’சஜித் முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி’

04.11.2022 11:30:54

ஜித் பிரேமதாச முதுகை நிமிர்த்தி முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து நிற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டத்திற்கு எதிராக தீர்மானம் எடுக்க முடியாத ஒருவருடன் நிற்க தாம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்டவருடன் நின்று ஜனநாயகத்தை வெல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.