சூர்யாவுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்!.
19.08.2026 15:10:51
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்த படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு ஏற்கனவே கருப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் சூர்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது.
படம் வெளியான முதல் நாளே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. படத்தில் சில குறைகள் இருந்தாலும் படம் ஒரு நல்ல ஃபீல் குட் படமாக உருவாகியிருப்பதாக ரசிகர்கள் சொன்னார்கள். இதன் காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 128 கோடி வரை வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.