கோஹ்லி, ரிஷாப் விளாசல் வீண்
இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டும் எடுத்தது. கேப்டன் கோஹ்லி 57 ரன்கள் எடுத்தார்.'டி-20' உலக கோப்பை தொடரின் 7வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. முதல் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது 12 அணிகள் தலா இரு குரூப்பாக பிரிக்கப்பட்டு, 'சூப்பர்-12' சுற்று போட்டிகள் நடக்கின்றன. 'குரூப்-2'ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் இந்திய அணியில் இஷான் கிஷான், அஷ்வின், ராகுல் சகார், ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி சேர்க்கப்படவில்லை.