ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைத்து தங்க நகைகள் திருட்டு!
16.08.2021 04:00:00
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவில் உள்ள மாங்குளம் பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் உடைத்து அம்மனின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று அதிகாலைவேளை கதவினை உடைத்த கொள்ளையர்கள் அம்மனின் தங்க நகைகள் சுமார் 18 பவுணுக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆலய நிர்வாகியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் தடயவியல் காவல்துறையினர் மோப்ப நாய்கள் சகிதம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.