ஊரடங்கு விதிகளை மீறிய 816 பேர் கைது

17.09.2021 05:59:52

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில், 816 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 73,894 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் உரிய அனுமதியின்றி 142 வாகனங்களில் பயணித்த 263 பேர், மேல் மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.