இரட்டை பாண்டா குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா

10.10.2021 12:49:56

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மிருககாட்சி சாலையில் சமீபத்தில் பிறந்த இரட்டை பாண்டா கரடி குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா நேற்று நடந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யுனோ மிருககாட்சி சாலை உள்ளது. இங்கு பாண்டா கரடி ஒன்று, இரட்டை குட்டிகளை ஜூன் மாதம் ஈன்றது.இந்த பாண்டா கரடி குட்டிகளுக்கு பொருத்தமான பெயர்களை எழுதி அனுப்பும்படி மிருககாட்சி சாலை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.ஒரு லட்சத்து, 90 ஆயிரம் பேர், பெயர்களை எழுதி அனுப்பினர். இதில் இருந்து இரண்டு பெயர்களை அதிகாரிகள் தேர்ந்தெடுத்தனர்.

பெயர் சூட்டும் விழா மிருககாட்சி சாலையில் நேற்று நடந்தது. டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே இரட்டை பாண்டா குட்டிகளின் பெயர்களை அறிவித்தார்.பெண் பாண்டா குட்டிக்கு லெய் லெய் என்றும், ஆண் குட்டிக்கு ஸியோ ஸியோ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ''ஜப்பானிய மொழியில் லெய் லெய் என்றால் பிரகாசமாக உதிக்கும் சூரியன் என்றும், ஸியோ ஸியோ என்றால், மொட்டு மலர்வது என்றும் அர்த்தம்,'' என, கவர்னர் யுரிகோ தெரிவித்தார்.