ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை
”பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக களமிறக்கப்படுவார். ஆனால் இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் நாம் மேற்கொள்ளப்படவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாம் பலமான கட்சியாகவே தொடர்ந்தும் செயற்படுவோம். ரணில் விக்ரமசிங்கவுடன் எவ்வளவு தூரம் அரசியல் பயணத்தை தொடர முடியுமோ அதுவரையும் பயணிப்போம். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக எமது கட்சி உறுப்பினர்கள் எவரேனும் கருத்து தெரிவிப்பார்களாயின் அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் எழுந்துள்ள நெருக்கடி நிலையால் எமக்கு எந்தபாதிப்பும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியில் இருந்து வெளியேறிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோன்று புதிய கட்சியை உருவாக்கிய சந்தர்ப்பமும் உள்ளது. ஆனாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்புவதற்கான உரிமை சந்திரிக்காவிற்கு உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.