கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து!

23.12.2024 11:32:15

மத்திய ஆப்ரிக்க நாடான கொங்கோவில் உள்ள ஈக்குவடார் மாகாணத்தில் புசிரா ஆற்றில்  நேற்று முன்தினம் பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 100 க்கும்  மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படும் வேளை குறித்த படகில் 150 க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர் எனவும், எடை தாங்க முடியாமல் குறித்த படகு நீரில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மாயமான நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும்,  உயிரிழப்புக்களின் எண்ணிக்கை  மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.