இன்று டெல்லியில் புதிய போராட்டம்..
புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டம் நடத்த 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அழைப்பு விடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், 13 கோடி வாக்குகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைகேட்டிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் சிஜேபி அறிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மற்றும் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்ட போதிலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி அமைப்பின் பொறுப்பாளர் அஜின்கியா ஷிண்டே தெரிவித்துள்ளார். மேலும், அமைதியான முறையில் ஒன்று கூடுவதைத் தடுக்க அரசு அவசரநிலையைப் போன்ற சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லி போக்குவரத்து காவல்துறை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜந்தர் மந்தர், சன்சத் மார்க், கன்னாட் பிளேஸ், மண்டி ஹவுஸ், படேல் சவுக் மற்றும் தவுலா குவான் உள்ளிட்ட மத்திய டெல்லியின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குச் செல்வோர் கூடுதல் நேரத்தை ஒதுக்கிப் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.