திருகோணமலையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம் !

08.07.2021 09:09:55

திருகோணமலை மாவட்டத்துக்கான சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை பூம்புகார், மட்கோ மற்றும் சீனக்கூடா உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

அதிகளவான வயோதிபர்கள் ஆர்வத்துடன் 2வது கட்ட தடுப்பூசிகளை காலை வேளையில் பெற்றுக்கொள்ள வருகை தந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தொடர்ச்சியாக நாளை முதல் திருகோணமலையின் ஏனைய பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.