கலிஃபோர்னியா காட்டுத் தீயை உருவாக்கிய இளைஞர் கைது!
| 
			 கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை உலுக்கிய பயங்கரமான சம்பவங்களில் ஒன்றாக கலிஃபோர்னியா காட்டுத்தீ சம்பவம் பார்க்கப்படுகிறது. இந்த காட்டுத்தீ சம்பவத்தில் பசிபிக் பாலிசேட்ஸின்(Pacific Palisades) பெரும்பாலான அண்டை பகுதி பேரழிவுக்கு உள்ளானது. இந்த கோர தீ விபத்தானது அதிகாரப்பூர்வமாக ஜனவரி 7ம் திகதி மிகப்பெரிய அளவில் பரவ தொடங்கி, அண்டை பணக்கார சமூகத்தில் 12 பேரை கொன்றது.  | 
		
| 
			 அத்துடன் 6000-க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டிடங்களை முற்றிலுமாக அழித்தது. இந்நிலையில் இந்த தீ விபத்தை முதன் முதலில் தூண்டிவிட்ட 29 வயது ஜொனாதன் ரிண்டர்கனெக்ட் என்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டின் போது ஜொனாதன் தூண்டி விட்ட இந்த காட்டுத்தீ ஒரு வாரத்தில் பிரம்மாண்ட காட்டுத்தீயாக பரவி கலிபோர்னியாவின் முக்கிய பகுதிகளை அழித்துள்ளது. Uber சாரதியான ஜொனாதன் தன்னுடைய வேலையை முடித்து விட்டு திரும்பிய போது காட்டுத் தீக்கான ஆரம்ப தீயை மூட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய அவர், மீண்டும் தீயின் அளவை அறிந்து கொள்ள அதே இடத்திற்கு திரும்பி வந்து பார்வையிட்டுள்ளார். அத்துடன் அவரது டிஜிட்டல் சாதனங்களில் இருந்து கிடைத்த சாட்சிகளில், அவர் சாட்ஜிபிடியில் நகரத்தை எரிக்கும் காட்டுத்தீ புகைப்படத்தை உருவாக்கி இருந்தது கிடைத்து இருப்பதாக நீதித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  |