மீண்டும் திரைக்கு வரும் பிரண்ட்ஸ் திரைப்படம்!
22.10.2025 11:35:23
சித்திக் இயக்கத்தில் விஜய் – சூர்யா இணைந்த நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்து வெகுவாக ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் பிரண்ட்ஸ் .
இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், நகைச்சுவை அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் இப் படம் 4 கே டிஜிட்டல் முறையில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி பிரண்ட்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளதாக போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.