ரஜினிகாந்த் கூலி படத்தில் நடிக்க வாங்கியுள்ள சம்பளம்!

04.08.2025 07:00:00

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் படம்தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து படத்தின் மீது இருந்து எதிர்பார்ப்பை இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக ட்ரைலர் முடிவில் வரும் ரஜினியின் டீ ஏஜிங் லுக் மிரட்டலாக இருந்தது. ரஜினியை செம மாஸாக இப்படத்தில் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கண்டிப்பாக ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கம் தெறிக்க போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கூலி திரைப்படத்தில் தேவா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினி ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.