மரணமடைந்த நடிகர் சத்யேந்திரா.
29.05.2026 07:48:27
|
பிரபல நடிகரும், திரைப்பட விமர்சகருமான சத்யேந்திரா உடல்நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறார் அவர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணிக்கு அவர் உயிர் பிரிந்து இருக்கிறது. |
|
சத்யேந்திராவின் குடும்பத்தினர் மற்றும் ரத்த சொந்தங்கள் யாரும் தொடர்பில் இல்லாத நிலையில் அவர்களுக்கு தகவல் சொல்வதில் சிக்கல் எழுந்து இருக்கிறது. ரத்த சொந்தம் வந்தால் தான் உடலை தர முடியும் என மருத்துவமனை தரப்பு கூறிவிட்டதனால், அவரது இறுதி சடங்குகள் செய்வதில் சிக்கல் இருக்கிறது. உறவினர்கள் யாரும் வராத பட்சத்தில் சினிமா சங்கங்கள் மூலம் அதற்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது. |