கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை !

20.07.2021 21:43:27

 

ஏறக்குறைய 17 மாதங்கள் மூடப்பட்ட பின்னர், அடுத்த மாதம் முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு கனடா தனது எல்லைகளைத் திறக்கும்.

எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கை, நாட்டின் தடுப்பூசி வீதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் கொவிட்-19 தொற்றுகளில் தொடர்ச்சியான வீழ்ச்சிக்குப் பின்னர் வருகிறது.

சாதகமான முன்னேற்றம் தொடர்ந்தால், செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளையும் கனடா வரவேற்கும்.

அனைத்து பயணிகளும் நுழைவதற்கு முன் எதிர்மறை கொவிட்-19 சோதனையை முன்வைக்க வேண்டும்.

அமெரிக்க பயணிகள் மற்றும் அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான மாற்றங்கள், ஒகஸ்ட் 9ஆம் திகதி நடைமுறைக்கு வரும்.