டி.என்.பி.எல் தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது
14.08.2021 09:21:06
டி.என்.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. ‘தகுதிச்சுற்று 2’ல் திண்டுக்கல் அணியை 8 விக்கெட்டில் வீழ்த்தியது.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகின்றன. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருச்சி அணி, ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியது.