இன்று வெளியாகவிருந்த தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்குத் தடை.

27.02.2026 14:29:07

சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படம் பிப்ரவரி 27 அன்று அதாவது இன்று வெளியாக இருந்த நிலையில், அதற்கு கேரள உயர் நீதிமன்றத் தனி நீதிபதி 15 நாட்கள் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து படக்குழுவினர் உடனடியாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அவசர முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தடையை நீக்கக் கோரிய மனு மீதான விரிவான வாதங்களை கேட்டறிந்தனர். விசாரணையின் முடிவில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். படத்திற்குத் தடை நீடிக்குமா அல்லது திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது இந்தத் தீர்ப்பை பொறுத்தே அமையும். 

இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.திருமணமாகி முதலிரவிலேயே விவாகரத்து செய்த மணமகள்.. மணமகன் அதிர்ச்சி..!