"ஜேர்மனியில் வாழ பிடிக்கவில்லை": யாழ் இளைஞன் விபரீத முடிவு!
10.12.2025 14:41:20
|
ஜேர்மன் நாட்டில் யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் Germany சென்று அங்கு Refugee என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தாங்கவைத்தனர் |
|
விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி இருந்தார். இதனையடுத்து அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி வந்ததாக அறியப்படுகிறது. இந்நிலையில் இளைஞர் மனவிரக்ததிக்கு ஆளான நிலையில் நேற்று (9) முகாமில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக கூறப்ப்படுகின்றது. |