மத்திய அரசு தமிழை அவமதிப்பதை ஏற்க முடியாது -
தமிழை மத்திய அரசும் பிரதமரும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி மேலும் கூறியுள்ளதாவது, “நான் தமிழன் இல்லை. ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும் மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது.
தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு. டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாசாரத்தை மதிக்கவில்லை.
இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி, பெற்றோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.