மின்சாரத் தடைக்கான காரணம் வெளியானது

06.10.2021 14:24:46

நாட்டின் பல பகுதிகளில் நேற்று(செவ்வாய்கிழமை) திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே இதற்கான காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு எவ்வித மோசடி செயற்பாடுகளும் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.