அண்ணன் இயக்கத்தில் தனுஷ்

16.10.2021 14:20:05

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது நானே வருவேன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
 

விகிரியேசன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.