தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50,000 பேருக்கு எதிராக வழக்கு

11.08.2021 06:49:57

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53, 942 ஆக அதிகரித்துள்ளது.