பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கோரிக்கை !
30.06.2021 09:54:47
இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துமாறு துணைவேந்தர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் துணைவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறும் துணைவேந்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.