
ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று!
13.02.2025 08:12:57
றைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்று வருகின்ற நிலையில்
அவரது புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஊடக நிறுவன ஆசிரியர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் ஊடக பரப்பில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திருநெல்வேலியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்இறுதி கிரியைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.