பாகிஸ்தானிடம்தான் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு உள்ளது

25.02.2021 09:14:00

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

இலங்கை வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடுகையில், தங்கள் நாடு தீவிரவாதத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருவதாக தெரிவித்தார்.

காகாஷ்மீர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் எனவும்  கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டிய அனுராக் ஸ்ரீவத்சவா, தீவிரவாதமற்ற சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.