
ஷிஹான் ஹுசைனி காலமானார்!
தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார்.
அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர்.
அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.
பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார்.
அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு அவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 5 இலட்சம் இந்திய ரூபா நிதி உதவி வழங்கியது.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹுசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார்.