
உலகின் மிகச் சிறந்த நீதிபதி காலமானார்!
“உலகின் மிகச் சிறந்த நீதிபதி” என்று அன்புடன் அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ (Frank Caprio), கணையப் புற்றுநோயுடனான நீண்ட மற்றும் துணிச்சலான போராட்டத்திற்குப் பின்னர் புதன்கிழமை (20) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 88 ஆகும்.
ஃபிராங்க் காப்ரியோ வெறும் நீதிபதி மட்டுமல்ல.
சுமார் 40 ஆண்டுகள், ரோட் தீவில் உள்ள பிராவிடன்ஸ் நகராட்சி நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
நீதிக்கான கருணையுள்ள அணுகுமுறைக்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
அவரது தொலைக்காட்சித் தொடரான காட் இன் பிராவிடன்ஸ், பிரதிவாதிகளுடனான அவரது கருணையுள்ள தொடர்புகளை வெளிப்படுத்தியது.
நீதிபதி கேப்ரியோ பிராவிடன்ஸ் கல்லூரி மற்றும் சஃபோல்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
அவர் ரோட் தீவு இராணுவ தேசிய காவல்படையின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
1962 இல் பிராவிடன்ஸ் நகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 முதல் 2023 இல் ஓய்வு பெறும் வரை காப்ரியோ பிராவிடன்ஸில் நகராட்சி நீதிபதியாகப் பணியாற்றினார்.
அவருக்கு 2023 நவம்பரில் கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தச் செய்தியை ஒரு இதயப்பூர்வமான பேஸ்புக் வீடியோ மூலம் அவர் வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது