போர் நிறுத்தத்திற்கு மத்தியில் பதற்றம்

03.12.2024 07:40:21

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த வாரம் இரண்டு படையினருக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹிஸ்புல்லா போராளிகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான ஷெபா ஃபார்ம்ஸில் உள்ள மவுண்ட் டோவ் மீது இரண்டு ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

  

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இஸ்ரேல் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஹிஸ்புல்லாவின இந்த செயல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். இதற்கு இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும்' என எச்சரித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்க பாதுகாப்புத்துறை (பென்டகன்), 'இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது' என தெரிவித்துள்ளது.