எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்புண்டு

04.04.2024 07:08:21

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று இந்தியா முழுவதும் உள்ள சின்ன சின்ன கட்சிகளை கூட்டணிகள் சேர்த்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக கூட வர வாய்ப்பு இருப்பதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக கூட வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று இந்தியா முழுவதும் உள்ள சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார்
 

பாஜக கூட்டணி பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்துள்ள நிலையில் திமுக கூட்டணி இன்னும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சொல்லவில்லை. இந்த நிலையில் அதிமுக கூட்டணி திடீரென எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

40 தொகுதிகளிலும் அதிமுக ஜெயிக்குமா அப்படியே ஜெயித்தாலும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக முடியுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.