மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் டுவேன் ப்ராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

07.11.2021 10:53:10

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் டுவேன் ப்ராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி முடிவில் ப்ராவோ ஓய்வுபெற்றார்.

ஆடவருக்கான 2 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் 3 ஐசிசி சம்பிய்ன்ஷ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் 7 ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக டுவேன் ப்ராவோ விளையாடியிருந்தார்.

2004 இல் நடைபெற்ற ஐசிசி சம்பயின்ஷிப் கிண்ணம், 2012 இருபது 20 உலகக் கிண்ணம், 2016 இருபது 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை சுவீகரித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டுவேன் ப்ராவோ இடம்பெற்றிருந்தார்.

நேற்று இடம்பெற்ற போட்டியுடன் 91 சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் விளையாடிய ப்ராவோ, 1,255 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 78 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.