சட்டசபையில் தெறிக்கவிட்ட முதல்வர்!.
கடந்த 3ம் தேதி சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 116 நாட்கள் தவெக ஆட்சியில் நடந்த நடந்த நிறைய சம்பவங்களை கூறி இதற்கெல்லாம் முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும். பன்ச் வசனம் பேசாமல், திமுகவை குறை சொல்லாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் எனவும் நக்கலாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று சட்டசபையில் அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய் ‘கடந்த மூன்றாம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மிகவும் நக்கலாக பேசினார். ஒரு விஷயத்தைப் பற்றி பதில் சொல்வதற்கு பதில் உரையை தயாரித்த பிறகுதான் பேச வேண்டும். அதுதான் சரியானது.. அப்படித்தான் இன்று பேச வந்திருக்கிறேன்.. ஊழல் என்று நான் சொன்னாலே திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று விடுகிறார்கள்.. ஆதாரம் கொடு.. ஆதாரம் கொடு என்கிறார்கள்.. திமுக எவ்வளவு ஊழல் செய்தது என்று அமலாக்கத்துறை ஆதாரத்துடன் தெளிவாக கூறியிருக்கிறது’ என்று சொல்லி அமலாக்கத்துறை சொன்ன குறிப்பிட்ட தகவல்களை ஜோசப் விஜய் படிக்க தொடங்கினார்.
கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது சர்க்காரியா கமிஷன் திமுக வாங்கிய ஊழல்கள் சொல்லப்பட்டிருக்கிறது.. அதேபோல் கடந்த ஆட்சியில் கட்சி நிதி வாங்கியதற்கு நிறைய ஆதாரங்களை அமலாக்கத்துறை கூறி இருக்கிறது. 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது..
கட்சி நிதி வாங்கியதில் முக்கிய நபர்கள் முக ஸ்டாலின், உதயநிதி என அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை கூறி இருக்கிறது. தமிழக அரசியலில் 1967, 1977, 1982, 2026 அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்... இந்த விஜய்’ என அவர் பேசினார்.