பிளாக்பஸ்டர் ஆகியுள்ள ஆடு 3 திரைப்படத்தின் வசூல்!
26.03.2026 07:57:04
|
மலையாள திரையுலகில் இருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது. பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ், மின்னல் முரளி, 2018, Eko போன்ற பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அப்படி, கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பிளாக்பாஸ்டராகியுள்ள திரைப்படம்தான் ஆடு 3. ஜெயசூர்யா, விநாயகன் நடிப்பில் உருவான இப்படத்தை இயக்குநர் மிதுன் தாமஸ் இயக்கியிருந்தார். |
|
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஆடு 3 திரைப்படம் ஆறு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஆறு நாட்களில் ரூ. 101 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். |